காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் உடலில் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் தெரியுமா.?



Health Benefits of curry leaf in tamil

நாம் உணவில் சேர்த்து பின்னர் தூக்கி போடும் கருவேப்பிலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா.? அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

* இந்த கருவேப்பிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக விட்டமின் ஏ, பி, பி 2, சி, கால்சியம், இரும்பு சத்து உள்ளது. தினசரி கருவேப்பிலை சாப்பிட்டுவர இது முடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.

* தினமும் காலையில் சிறிதளவு கருவேப்பிலை சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய உதவுகிறது. இதன் மூலம் இடுப்பு சதையும் குறையும்.

health tips

* காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பேரீச்சம் பழத்துடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து சாப்பிட்டுவந்தால் இரத்தசோகை நீங்கும்.

* வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதயத்தை பலப்படுத்தும். மேலும் பெருந்தமனி தடிப்பையும் போக்க இந்த கறிவேப்பிலை உதவுகிறது.

* தினம் கருவேப்பிலை சாப்பிடுவது செரிமான பிரச்னையை தீர்க்கும். மேலும் முடி வளர்ச்சியை தூண்டும்.