53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பெரும் ஆபத்து காத்திருக்கு!! டாய்லெட்டில் தொலைபேசி பயன்படுத்துவதால் என்னெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா??
டாய்லெட்டில் அமர்ந்து நீண்டநேரம் செல்போன் பயன்படுத்துவதால் நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது.
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பழக்கத்தில் ஒன்று டாய்லெட்டில் அமர்ந்து நீண்டநேரம் செல்போன் பயன்படுத்துவது, அல்லது செல்போனில் யாரிடமாவது பேசுவது. இப்படி செய்வதால் நமது உடலில் நமக்கு தெரியாமலையே பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது.
1 . இரத்த நாளங்கள் பாதிப்பு:
பொதுவாக டாய்லெட்டில் அமரும் போது அழுத்தம் உண்டாகி, அந்த அழுத்தம் ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்தினால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கும்.பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூல நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
2 . கிருமிகள் தாக்கும் ஆபத்து:
கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்து தொலைபேசி பயன்படுத்தும் போது உங்கள் தொலைபேசியில் 18 மடங்கு கிருமிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் பேசும்போது கிருமிகள நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் நமது உடல் பாதிக்கப்பட்டு தேவை இல்லாத வியாதிகள் நம்மை தாக்கும் அபாயம் அதிகம்.
அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பத்து நிமிடத்திற்கு மேல் அமரும் போது, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது