கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து தரும் மட்டன் ஈரல் குழம்பு.! எப்படி செய்யலாம்.!?



health-recipes-of-mutton-liver-gravy

இரும்புச்சத்தை அதிகரிக்கும் மட்டன் ஈரல் குழம்பு

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் இரும்பு சத்து என்பது மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து மிகவும் தேவையான ஒன்று. இதற்காக மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் உணவின் மூலம் உடலில் இரும்பு சத்து அதிகரிக்க வைப்பது என்பது முக்கியமானது. 

எனவே இரும்பு சத்து அதிகரிக்க மட்டன் ஈரல் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டன் ஈரல் குழம்பை எளிதாக எப்படி செய்யலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

மட்டன் ஈரல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம்,  சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
கசகசா - 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
உப்பு - சுவைக்கேற்ப,
வெங்காயம் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
தக்காளி  - 1/2 கப்,
மட்டன் லிவர் - 400 கிராம்,
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
செய்முறை
முதலில் மட்டன் ஈரலை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கசகசா சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி வருகிறதா.? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.!?

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கிய பின்பு தக்காளி விழுதுகளை சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்த பின் கழுவி வைத்த மட்டன் ஈரல் துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும்.  பின்னர் இதில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். பின்னர் ஈரல் நன்றாக வெந்த பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஹெல்தியான மட்டன் ஈரல் குழம்பு தயார்.

இதையும் படிங்க: எச்சரிக்கை.! ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் கண்டிப்பாக குடிக்கக்கூடாது... ஏன் தெரியுமா.!?