காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கொத்து பரோட்டா வீட்டிலேயே மணக்க மணக்க செய்வது எப்படி...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஹோட்டல்களில் அதிகம் கொத்து பரோட்டாவை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை மிக்க கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
பரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
முதலில் வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய், பரோட்டா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி தனியே வைத்து கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின் அதனுடன் தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.அனைத்தும் நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும்.
அதனையடுத்து தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும். கடைசியாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சுட சுட சுவையான கொத்து பரோட்டா தயார்.