சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி.? வாங்க பார்க்கலாம்.!



how-do-prepare-chilly-idly

சுவையான ப்ரைடு இட்லி எப்படி செய்வது என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

சாம்பார் பொடி-1  டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 2

தக்காளி-1

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்

 கறிவேப்பிலை சிறிதளவு

குடைமிளகாய்-1

வெங்காயம்- 2

 இட்லி பொடி-2 டீஸ்பூன்

இட்லி மாவு- 2 கப்

health tipsசெய்முறை :

முதலில் இட்லி மாவை சிறு,சிறு இட்லிகளாக ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அதையெடுத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் சூடானவுடன், கடலை பருப்பையும், கடுகையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

health tipsபின் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் குடை மிளகாயை சேர்த்து வதக்கிக் கொண்டு, உப்பையும், தக்காளியையும் போட்டு வதக்கிய பின்னர், சாம்பார் பொடி மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக  வேகவைத்த இட்லியை சேர்த்து கிளறி பின் 4 நிமிடம் வரையில் மசாலாவில் கலக்குமாறு கிளற வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி வைத்தால், சுவையான ப்ரைடு இட்லி தயாராகிவிடும்