வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
சிக்கன்-மட்டன் போல, நாவில் எச்சில் ஊறவைக்கும் முட்டை சுக்கா செய்வது எப்படி?.. சமையல் டிப்ஸ் இதோ.!
சிக்கன், மட்டன் போன்றவற்றில் சுக்கா செய்து சாப்பிட்டு போர் அடித்து விட்டாலோ அல்லது வார இறுதி நாட்களில் சிக்கன், மட்டன் எடுக்க முடியவில்லை என்ற நினைப்பு இருக்கும் நபர்களுக்கு அசத்தல் மாற்று உணவாக முட்டை சுக்கா இருக்கும்.
முட்டை சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு - கால் கரண்டி,
சோம்பு - கால் கரண்டி,
முட்டை - ஆறு,
மிளகாய் தூள் - ஒரு கரண்டி,
மஞ்சள் தூள் - கால் கரண்டி,
கரம் மசாலா - ஒரு கரண்டி,
சிறிய வெங்காயம் - ஒன்றரை கப் நறுக்கியது,
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,
தயிர் - ஒரு கரண்டி,
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை உடைத்து, அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி கொப்பறையில் தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை வைத்து அதில் முட்டை கலவையை ஊற்றி சுமார் 15-20 நிமிடம் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேக வைத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் சின்ன வெங்காயத்தை இட்டு நன்கு வதக்க வேண்டும். அதன்பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். விருப்பம் இருப்பின் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து வதக்கி வெட்டி வைத்துள்ள முட்டைகளை இட்டு கிளறி சுடச்சுட இறக்கினால் முட்டை சுக்கா தயார்.