காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வீட்டிலேயே சுவையான கொத்து பரோட்டா செய்வது எப்படி?..!
இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வார இறுதி நாட்களில் கடைகளில் சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி இருக்கிறோம். கடைகளில் உணவு விரும்பிகளின் விருப்பத்தை புரிந்துகொண்டு, ஒவ்வொரு உணவிலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்து ருசியுடன் விற்பனை செய்து வருகின்றனர். சாலையோர உணவகம் முதல், 5 நட்சத்திர உணவகம் வரை கிடைக்கும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டிலேயே செய்வது என காணலாம்.
தேவையான பொருள்கள்:
பரோட்டா - 2,
முட்டை - 1,
வெங்காயம் - 2,
எண்ணெய் - 4 கரண்டி,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு,
பூண்டு - 8 பற்கள்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - தேவையான அளவு,
இஞ்சி பூண்டு விழுது (அரைத்து) - 2 கரண்டி அளவு,
கரம் மசாலா தூள் - 1 கரண்டி,
தனி மிளகாய் தூள் - 1 கரண்டி.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர், பரோட்டாவை சிறிது சிறிதாக கைகளால் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த கலவை வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி, தேவையான அளவுக்கு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும். இதன்பின்னர், பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
10 நிமிடங்கள் கழித்தும் வாசனைக்காக மீதமுள்ள கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அனைத்துவிட்டால், சுவையான கொத்து பரோட்டா தயார். சிக்கன் அல்லது மட்டன் சேர்க்க விரும்புவார்கள், அதனை தயார் செய்து வைத்து தக்காளி வதங்கியதும் சேர்த்துக்கொள்ளலாம்.