சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை வீட்டிலேயே செய்வது எப்படி?..!



How to Prepare Vazhaipoo Vadai

 

எப்போதும் உளுந்த வடை, மசால் வடை என சாப்பிட்டு பழகியோருக்கு உடலுக்கு நன்மையை தரக்கூடிய வாழைப்பூவில் வடை செய்து கொடுத்தால் சற்று மாறுதலுடன் சுவையான வடையும் கிடைக்கும். இன்று வாழைப்பூவில் வடை செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1, 
கடலைப்பருப்பு - 1 கப், 
காய்ந்த மிளகாய் - 2,
பச்சை மிளகாய் - 5, 
பெருஞ்சீரகம் - சிறிதளவு, 
வெங்காயம் - 2, 
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, 
இஞ்சி, பூண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் வாழை பூவை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். 

மிக்ஸியில் இஞ்சி - பூண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் 5, பெருஞ்சீரகம் அரை ஸ்பூன், அதனுடன் நாம் ஊற வைத்த கடலைப்பருப்பு அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறதளவு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது சூடான சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை தயார். வாழைப்பூவை உண்பதால் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்., உடல் சூட்டை தணிக்கும்., கை-கால் எரிச்சலையும் குணமாக்கும்.