கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
40 ஆண்டுகள் தனியாளாக 14 குளங்களை வெட்டிய சாதனை மனிதர்; இப்படியும் ஒரு மாமனிதரா.!

கர்நாடக மாநிலத்திலுள்ள காமேகவுடா (82 )என்ற முதியவர் 40 ஆண்டுகளாக தனி ஒரு ஆளாக போராடி 14 குளங்களை வெட்டியுள்ளார். அவரது இந்த அரிய சாதனையை பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசு மாநிலத்திலேயே மிக உயரிய இரண்டாவது விருதான கர்நாடக ரஜோட்சவா என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், கண்மாய்கள் என இருந்த நீர் ஆதாரங்களை எல்லாம் உருத்தெரியாமல் அழித்தொழிக்கும் இக்காலகட்டத்தில் தனி ஒரு ஆளாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவரின் எதிர்ப்புகளையும் மீறி இயற்கையை நேசிக்கும் ஒரு மாமனிதராக விளங்குபவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மாலவல்லி தாலுகா தாசனடூடி கிராமத்தை சேர்ந்த காமேகவுடா.
எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும் தனது சொந்த செலவில் 40 ஆண்டுகளாக 14 குளங்களை வெட்டிய அந்த மாமனிதருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதின் மூலம் ரூ 1 லட்சம் பணம் மற்றும் 25 கிராம் தங்கமும் வழங்கப்படும். அப்போதும் காமேகவுடா அந்த பணத்தைக்கொண்து 15வது குளத்தை வெட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து காமேகவுடாவுடா கூறும்போது: தான் ஏற்கனவே கட்டப்பட்ட 14 குளங்களை விரிவுப்படுத்தும் பணியில் உள்ளதாகவும் அதன் மூலம் விலங்குகள், பறவைகள், என பல உயிரினங்கள் பயன்பெறும் என்றும். தற்போது கிடைத்துள்ள விருதின் மூலம் வரும் பணத்தை அடுத்த குளத்தை வெட்ட பயன்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளார். அதற்கான பணியை வரும் ஜனவரி மாதம் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.