மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு பிரச்சனை?.. ஆய்வில் அதிர்ச்சி.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
மாதவிடாய் சுழற்சி முடிவடைந்துவிடும் 50 வயதில் உள்ள பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், மாதவிடாய் காலம் முடிவடையும் தருவாயில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெற்றுள்ள 60 வயது பெண்களுடன் ஒப்பிடுகையில், 40 வயதிலேயே பெண்களுக்கு மாதவிடாய் காலம் நிறைவடையும் பட்சத்தில் அவர்களுக்கு இதய நோய் அபாயம் இரண்டு மடங்கு இருப்பதாகவும் தெரியவருகிறது. 40 வயது முதல் 44 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு, இதய நோய் ஏற்படும் வாய்ப்பு 40 % அதிகளவில் உள்ளது.
அதிகளவு உடற்பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல காரணத்தால் மாதவிடாய் விரைவாகவே பெண்களுக்கு நின்று விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சேர்க்கரிக்கப்பட்ட 3 இலட்சம் பெண்களின் மருத்துவ அறிக்கைகள் மூலமாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.