மயிலின் பிரிவை தாங்க முடியாமல் பின்னாடியே சென்ற மற்றொரு மயில்.! கண்கலங்கவைக்கும் வீடியோ.!!
மனிதர்களை காட்டிலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணர்வுகள் அதிகம் என்பதை பலரும் அறிந்திருப்போம். தன்னை வளர்த்தவர்கள் வீட்டில் ஏதேனும் துக்கம் என்றாலே அவர்கள் வளர்க்கும் பிராணிகளும் துக்கம் அனுசரிக்கும்.
அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கச்சேரா பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளன. எப்போதும் ஒன்றை ஒன்று பிரியாமல் அப்பகுதியிலே சுற்றித் திரிந்ததை அப்பகுதி மக்கள் அவ்வப்போது பார்த்து வந்துள்ளனர்.
The peacock doesn’t want to leave the long time partner after his death. Touching video. Via WA. pic.twitter.com/ELnW3mozAb
— Parveen Kaswan (@ParveenKaswan) January 4, 2022
இந்நிலையில், இதில் ஒரு மயில் இறந்துவிட்டதால், இறந்த மயிலை இரண்டு பேர் தூக்கிச் சென்றுள்ளனர்.அப்போது இதனைப் பார்த்த மற்றொரு மயில், அவர்கள் பின்னோக்கி செல்கிறது. இதை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.