மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டு ராஜாவுக்கு இந்த நிலைமையா..!! சிங்கத்தை துரத்தி துரத்தி முத்தமிடும் ஆமை.! வைரல் வீடியோ.!
இந்த உலகில் காட்டு ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு சிங்கம். இதன் கம்பீர நடை, வேட்டையாடும் திறன், பல கிமீ தூரம் கேட்கும், இதன் உறுமல் ஆகியவை மற்ற விலங்குகளை விட சிங்கத்தைத் தனித்துக் காண்பிக்கிறது. சிங்கத்தை பார்த்தாலே அனைத்து விலங்குகளும் நடுங்கும்.
ஆனால் கம்பீரமான சிங்கம், வயதான காலத்தில் தளர்ந்து நடக்கும்போது அதனை சீண்டாதே விலங்குகளே இருக்காது. குறிப்பாக, ஓநாய்கள் வயதான சிங்கங்களை சுற்றி வளைத்து வேட்டையாடும் வீடியோக்கள் காண்போரை கலங்க வைக்கும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், ஆமை ஒன்று சிங்கத்தை துரத்தி துரத்தி முத்தம் கொடுக்கிறது.
— African animal (@africaniml) March 13, 2022
டிவிட்டரில் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வயதாகி இருக்கும் சிங்கம், குளம் ஒன்றில் தண்ணீர் குடிக்க வருகிறது. மெதுவாக தண்ணீரை பருகும்போது தண்ணீருக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஆமை, சிங்கத்தின் அருகே பயப்படாமல் சென்று முத்தம் கொடுக்கிறது. சிங்கம் பின்னோக்கி நகர்ந்தாலும் ஆமை விடாது துரத்தி முத்தம் கொடுக்கிறது. ஆனால், அந்த சிங்கம் ஆமையை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.