பிறந்த குழந்தைக்கு ஏன் கண்ணீர் வரவில்லை என்று தெரியுமா?..! தெரிஞ்சுக்கோங்க அசந்துபோவீங்க..!!



why-newborn-baby-crying-without-tears

குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு தான் அழுதாலும் அதன் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை நாம் பார்த்திருக்க முடியாது. இது ஏன் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

பச்சிளம் குழந்தை பிறக்கும் பொழுது அழுகை சத்தம் வெளிப்பட்டாலும், குழந்தையின் கண்களில் பிறந்தவுடன் கண்ணீர் உற்பத்தியாகாது.

குழந்தை பிறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் உருவாகும் என்று பலரும் நினைத்து கொண்டுள்ளனர். இருப்பினும் குழந்தை பிறந்தவுடனே குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உற்பத்தியாகாது.

New born baby

குழந்தை பிறந்து 6 முதல் 8 வாரங்களுக்கு பின்னரே குழந்தையின் உடலில் ஏற்படும் மாறுபாட்டால், லாக்ரிமல் சுரப்பிகள் சுரந்து அதன் மூலமாக கண்ணீர் உற்பத்தியானது அதிகரிக்கும்.