"தமிழர்கள் இந்தியை கற்றுக்கொண்டால் இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" - அமித்ஷா 



Amitsha about tamilans to learn hindi

மிழகத்தில் பல காலமாக பேசப்பட்டு வரும் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுவது இந்தி மொழி கற்பது. தமிழகத்தில் திராவிடம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஹிந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. இந்தி எங்களுக்கு வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளனர்.

மேலும் மொழி பிரச்சனை பல காலமாகவே இருந்து வந்துள்ளது. தமிழர்கள் இந்தியை கற்க மாட்டோம் ஹிந்தி எங்களுக்கு தேவை இல்லை என்று பல கட்சிகள், பல அரசியல்வாதிகள், சினிமா துறை சேர்ந்தவர்கள் என்று பலர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சிலர் மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழி. அறிவு வளர்ச்சிக்கு மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது அமைச்சர் அமித்ஷா தமிழர்கள் இந்திய கற்க வேண்டும். தமிழர்கள் தமிழுடன் சேர்ந்து இந்தியையும் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இப்படி நடந்தால் இந்தியா முன்னேவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.