#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கூட்டணி கட்சியில் இருந்தாலும் அதை மட்டும் நாங்கள் விடமாட்டோம்! அன்புமணி ராமதாஸ்!
இந்தியா முழுவதும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில் மத்தியில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் முக்கிய அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது. இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில் மத்தியில் பாஜக மீண்டும் வெல்லும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெல்லும், இதைத்தான் கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் கூறிகொண்டுளோம்.
அதுபோல, நாங்கள் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் எனவும் அன்புமணி கூறினார்.
மேலும், நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார் அன்புமணி.