"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மீண்டும் மீண்டுமா.!! காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.!! பாஜகவிற்கு தாவிய மற்றொரு எம்பி.!!
2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் 18 வது பாராளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
இவர்களை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு முடித்து தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது. இந்த பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கி ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
பொதுத் தேர்தலுக்கான தேதியை நெருங்கி வரும் சூழலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தனர். இது தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போதும் காங்கிரஸ் கட்சியின் எம்பி அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரியானா மாநில எம்பி நவீன் ஜிண்டால் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ரா தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்த முறை போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவில் இணைந்துள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி குருஷேத்ரா தொகுதியை ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.