மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!!
சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்கள் அவர்களது நிரந்தர பணி ஆணை வழங்க கோரி சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர்களை, திருவள்ளூர் கூட்டுறவு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.