திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ELECTION 2024: அடம் பிடிக்கும் தேமுதிக... விட்டுக் கொடுக்குமா அதிமுக .? தொடரும் இழுப்பறி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல கட்சிகளுடன் தொகுதி பங்கிடையும் வெற்றிகரமாக முடித்து இருக்கிறது திமுக. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இலுப்பறியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்த அதிமுக இந்த முறை தங்களது தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடன் அதிமுக நிர்வாகிகள் உடனே தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மற்றும் தேமுதிக இடையே இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இன்னும் தீர்வு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதிமுக பாராளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்று தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கிடையே கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் கலந்து கொள்வது தொடர்பாக தேமுதிக இன்னும் முடிவு செய்ததாக தெரியவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தேமுதிக கட்சி பாஜக உடனும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.