#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முழுமையான ராஜபக்சேவாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார்; இவரும் ஒருநாள் தொண்டர்களால் விரட்டப்படுவார்: டி.டி.வி.தினகரன் கிண்டல்..!
சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை போல எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: -
சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அ.ம.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று கொடுங்கோலனாக செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா வழிநடத்திய மாபெரும் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்கிறார்.
இதன் காரணமாக இவரும் ராஜபக்சேவை போல அந்த கட்சியின் தொண்டர்களால் விரட்டப்படுவார். மழைக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும், மக்களுடைய சொத்துக்களுக்கும், அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.