"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
Lok Sabha 2024| "கூடாரத்தை காலி செய்த கூட்டம் பாமக"... பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனம்.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கடந்த தேர்தல்களில் பாஜக உடன் இணைந்து பயணித்த அதிமுக இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமையில் கூட்டணியை அமைத்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக புதிய தமிழகம் எஸ்டிபிஐ விஜயபாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருக்கின்றன. அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் சமூகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. இந்நிலையில் நேற்று அதிமுக கட்சி திருச்சியில் அதன் கூட்டணி தலைவர்களுடன் 2024 ஆம் வருட பொது தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்களது கூட்டணியில் இருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். கூட்டணியில் இருக்கிறோம் என்று நாடகமாடியவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததும் வேறு கூட்டணிக்கு சென்று விட்டார்கள். அவர்கள் கூடாரத்தை காலி செய்த கூட்டம் என மறைமுகமாக விமர்சித்துள்ளார். தேமுதிக கட்சி எந்த ஒரு சூழ்நிலையிலும் இது போன்ற ஒரு செயலை செய்யாது. நாங்கள் வாக்கு கொடுத்தால் அதில் உறுதியாக இருப்போம் என தெரிவித்திருக்கிறார்.