மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தான் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்!
அமலாக்கத்துறை முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தான் முதலில் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்த தொகுதியில் எம்.பி-யாக இருந்த கதிர் ஆனந்த் ஒரு முறையாவது இந்த தொகுதி பக்கம் வந்து மக்களை சந்தித்துள்ளாரா?, கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி உள்ளாரா? என சரமாரியாக கேள்வி கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உளறுவாயாக இருக்கும் கதிர் ஆனந்த், பெண்களை மதிக்காமல் கேலி செய்கிறார். எனவே ஒட்டுமொத்த பெண்களும் அவரை புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார். அமலாக்கத் துறையினர் எங்கெங்கோ ரெய்டு செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்கள் முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு தான் ரெய்டு சென்றிருக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து மக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம். மேலும், லாட்டரி மற்றும் கஞ்சா விற்பவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.