மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக அரசியல் கட்சிகள் விளம்பர அரசியல் செய்கின்றன: எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எல்.முருகன் கொந்தளிப்பு..!
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பகட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை நேரில் சென்று பார்த்ததாகவும் , அங்கு எந்த கட்டிடமும் இல்லை என்று மதுரை எம்.பி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.கவினர் விளம்பர அரசியல் செய்து வருகின்றனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசிய கருத்தை திரித்து பேசிவருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துமனை கட்டுமான பணியில், ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்று தான் ஜே.பி.நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொண்டாலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது கருத்தை திரித்து கூறுவதுடன் விளம்பர அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.