#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எச்சரிக்கையாக இருங்கள்" தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்.! தமிழக அரசியலில் அடுத்த அதிர்ச்சி.!
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் தனது தொண்டர்களுக்கு ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், "ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. அதே நாளில்தான் அ.ம.மு க வின் பொதுக்குழு நடைபெற இருக்கிறது. சுதந்திர தின நாளில் பொதுக்குழு நடைபெறும் காரணத்தால் தொண்டர்கள் அமைதியான முறையில் பொதுக்குழுவுக்கு வந்து செல்ல வேண்டும்.
காவல்துறைக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல் பொதுக்குழு நடைபெற வேண்டும்." என்று அதில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொதுக்குழுவில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானங்கள் தமிழ்நாட்டு அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க கூடிய வகையில் இருக்கும் என்றும் அந்த கடிதத்தில் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.