மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணாடி பேழையில் கருப்பு கண்ணாடியுடன் விஜயகாந்த் உடல்.. கதறித்துடிக்கும் பிரேமலதா, லட்சக்கணக்கான தொண்டர்கள்.!!
நடிகரும், தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தனது 71 வயதில் அவர் இயற்கை எய்தினார். அவரின் மரணத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வெட்டி - சட்டை, கருப்பு கண்ணாடி, தேமுதிக துண்டு ஆகியவை அணிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலை தூக்கி செல்லும்போது விஜயகாந்தின் மனைவி மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கதறி துடித்தனர். இன்னும் சற்றுநேரத்தில் கட்சி அலுவலகத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.