மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2nd T20: இந்தியா பேட்டிங்; ரோகித், உமேஷ் நீக்கம்; விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பு
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது T20 போட்டியானது இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்ந போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு தவான் களமிறங்குகிறார். அதேபோல் கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கௌல் களமிறங்குகிறார்.
மேலும் மார்கண்டேவிற்கு பதில் விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் பெற்ற தோல்விக்கு இந்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.