#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது பவுன்சரால் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைக்கும் ஆர்ச்சர்! வைரல் வீடியோ!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.
லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. அந்த போட்டியில் ஆட்டத்தின் 77 ஆவது ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 80 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்மித். அப்போது ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் தன்னுடைய அசுர வேகத்தால், ஆஸ்திரேலிய வீரர்களை மிரட்டி வருகிறார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி டிராவிற்காக போராடிக் கொண்டிருந்த போது , வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தை, ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் லெக் திசையில் அடித்தபோது இங்கிலாந்து வீரர் டென்லி அற்புதமாக பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார்.
WHAT A CATCH!!!
— England Cricket (@englandcricket) August 18, 2019
Scorecard/Clips: https://t.co/Ed4jO1fJ9r#Ashes pic.twitter.com/FUy0WMfAio
இதைக் கண்ட இங்கிலாந்து வீரர்கள், அந்த கேட்சை நம்ப முடியாமல் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர். ஆர்ச்சர் வீசும் பவுன்சர் பந்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிரமமாக இருந்துவருகிறது.