ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி நீக்கம்! இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும்! அனைத்திற்கும் மன்னிப்பு கேட்ட ஆர்ச்சர்!



Archer sorry for breaching bio-secure protocols

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.

இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக போடப்பட்டிருந்த பயோ-பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறியுள்ளார். இதனால், அவர் இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

archer

இந்தநிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தனிமை படுத்திய பிறகு 2 பரிசோதனைகளிலும் நெகெட்டிவ் என்று வந்தால் மட்டுமே ஜோப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் நீடிக்க முடியும் என தெரிகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் "நான் செய்த காரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் என்னை மட்டுமல்ல, என் மொத்த அணி நிர்வாகத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளேன். எனது செயல்களுக்கான பின்விளைவுகளை முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன்.அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.