வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்! ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓப்பன் டாக்!
பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் ட்விட்டர் மூலம் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதியுடன் உரையாடினார். அப்போது, T20 போட்டியில் பந்துவீச கடினமான பேட்ஸ்மேன் யார் என்று இஷ் சோதி ஆர்ச்சரிடம் கேட்டுள்ளார்.
இதற்க்கு பதிலளித்த ஆர்ச்சர், இந்தியாவின் லோகேஷ் ராகுல் தான் T20 போட்டியில் பந்துவீச கடினமான பேட்ஸ்மேன். இதனை ஐ.பி.எல் தொடரில் நான் உணர்ந்தேன் என தெரிவித்தார். கே.எல்.ராகுல் கடந்த ஆண்டு ஐபிஎல்-லில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்று பேசப்பட்டார். ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்ததை அடுத்து கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.