#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது! தவானுக்கு பதில் இங்கிலாந்திற்கு பறந்த புதிய வீரர்
காயத்தின் காரணமாக ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியின் இரண்டு துவக்க ஆட்டக்காரர்கள் சதம் அடித்து விட்டார்கள் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்த வேளையில் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியானது.
அன்றைய போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் கட்டிவிரலில் அடிக்கவே அவர் இரண்டாவது இன்னிங்சில் பீல்டிங் செய்யவே வரவில்லை. அதனை தொடர்ந்து கடந்த செவாய்க்கிழமை தவான் அடுத்த 3 வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என அறிவித்தது. அதன் பின்னர் அவருக்கு பதில் மாற்று வீரராக இந்தியாவில் இருந்து யாரும் அனுப்பப்படுவார்களா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது.
அதிலும் எந்த வீரர் அனுப்பப்படுவர் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது. அந்த வரிசையில் ரிசப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ரஹானே என பலவீரர்கள் வரிசையில் இருந்தனர். நேற்றுவரை இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்துவந்தது பிசிசிஐ. நாளை இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத இருப்பதால் அணியில் யார்யார் இடம்பெறுவர் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில் தவானுக்கு மாற்று வீரராக ரிசப் பந்த் இங்கிலாந்திற்கு சென்று விட்டதை பிசிசிஐ தற்போது உறுதி செய்துள்ளது. நாளை ஆட்டம் நடைபெறும் மாஞ்செஸ்டர் மைதானத்தில் ரிசப் பந்த் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிசிசிஐ இதனை உறுதி செய்துள்ளது. அனால் நாளைய போட்டியில் ரிசப் பந்த் களமிறங்குவாரா என்பது நாளை தான் தெரிய வரும்.
Look who's here 👍#TeamIndia #CWC19 pic.twitter.com/V4y27pBYOC
— BCCI (@BCCI) June 15, 2019