மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லி அணியின் தோல்வியால் அதல பாதாளத்திற்கு சென்ற சென்னை அணி! புள்ளி பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா?
டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஐபிஎல் 13 வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பதினொரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியில் டெல்லி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து டெல்லி அணி இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் நேற்று டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி நேற்றைய நிலவரப்படி ஏழாவது இடத்தில் இருந்த நிலையில், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதையடுத்து ஏழாவது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு சென்றுள்ளது.
இதுவரை ஒரு முறை கூட முதல் சுற்று போட்டியில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அடுத்த லீக் சுற்றுக்கு தகுதி பெறுமா? இனிவரும் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடுமா என சென்னை அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.