13 வருட ஐபில் வரலாற்றில் இதுவே முதல் முறை! முதல் முறையாக சாதித்துள்ள டெல்லி அணி! ரசிகர்கள் எதிர்பார்ப்பு



delhi-team-first-time-in-ipl-final-match

ஐபில் வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது டெல்லி அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தவானின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது 189 ரன்கள் அடித்தது. 190 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றமளித்தனர்.

IPL T20 2020

வில்லியம்சன் சற்று நிதானமாக ஆடி 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்திருந்தநிலையில் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். இறுதியில் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் டெல்லி அணி நேற்றைய போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 13 வருட ஐபில் வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணி இறுதி போட்டிக்கு சென்றுள்ளது இதுவே முதல் முறை. முதல் முறையாக இறுதி போட்டிக்கு சென்றுள்ள டெல்லி அணி நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா என டெல்லி அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.