தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆட்டத்தின் இடையிலேயே இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 40 வது லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் வங்கதேசம் அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.
இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பிடித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் எடுத்த போது, ரோகித் சர்மா 104 ரன்களில் அவுட்டானார்.
ராகுல் 77 ரன்கள் எடுத்த போது ரூபல் வேகத்தில் வெளியேறினார். பின் வந்த கேப்டன் கோலி (26), ஹர்திக் பாண்டியா (0) ஏமாற்றினர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சின்போது இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
ஆரம்பத்திலிருந்து விக்கெட் கீப்பிங் செய்துவந்த தோனி திடீரென 11வது ஓவரின் முடிவில் வெளியேறினார். அவருக்கு பதிலாக அடுத்த இரண்டு ஓவர்களில் ரிசப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். திடீரென தோனி வெளியேறியதும் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் சற்று அதிர்ச்சி ஆகினர். ஆனால் பின்னர் 14-வது ஓவரில் இருந்து மீண்டும் தோனி களத்திற்குள் வந்து விக்கெட் கீப்பிங் செய்யத் துவங்கினார்.
ஆரம்பத்தில் உலக கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வானவர் தினேஷ் கார்த்திக். இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடும் நிலையிலும் இடையில் சேர்ந்த ரிசப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.