மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் T20: இந்தியா முதலில் பேட்டிங்; ஷிகர் தவான், விஜய் சங்கர் நீக்கம்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்குகிறார். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு உமேஷ் யாதவும் விஜய் சங்கருக்கு பதிலாக மயங் மார்க்கண்டேயரும் களமிறங்குகின்றனர்.
இந்திய அணி:
ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ரிசப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, உமேஷ் யாதவ், மயங் மார்க்கண்டே, சாகல், பும்ரா
ஆஸ்திரேலியா அணி:
பின்ச், ஆர்கி சார்ட், ஸ்டாய்னிஸ், மாக்ஸ்வெல், ஹ்ன்ஸ்கோம்ப், டர்னர், நைல், கம்மிண்ஸ், ரிச்சர்ட்சன், பெக்ரன்டப், சம்பா