96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பதவியேற்ற முதல் நாளே தோனி குறித்து பேசிய கங்குலி! என்ன பேசினார் தெரியுமா?
இன்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி முதல் நாளே தோனியை குறித்து பேசியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர். தாதா என அழைக்கப்படும் இவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடைபெற்ற பிசிசிஐ கமிட்டி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சௌரவ் கங்குலி. லான முடிவுகளை எடுப்பதில் வல்லவரான கங்குலி இந்திய அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக தோனியின் நிலைபற்றி கூடிய விரைவில் ஒரு முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று பதவியேற்றதும் செய்தியாளரிடம் பேசிய கங்குலி, "தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். அவரின் சாதனைகளை பட்டியலிட்டால் அது நம்மை வியப்பில் ஆழ்த்தும். தோனி இந்திய அணிக்கு கிடைத்தது இந்தியாவிற்கே பெருமை" என புகழாரம் சூட்டியுள்ளார்.
BCCI President @SGanguly99 on Dhoni :-
— Whistle Podu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) October 23, 2019
"Champions don't finish very quickly. If you sit down & take note Dhoni's achievements, you will say wow! it is M S Dhoni. Till I am around everybody will be respected, that doesn't change."
Video Courtesy : ANI #Ganguly #MSDhoni #Dhoni pic.twitter.com/5mxGTnTxFE