மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிய கோப்பை 2023: மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா; ஆறுதல் வெற்றியை தேடும் வங்கதேசம்..!!
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வென்ற இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டியில் திரில் வெற்றியை சுவைத்த இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன.
வெறும் சம்பிரதாய மோதலாக பார்க்கப்படும் இந்த போட்டியில், இந்திய அணி தரப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கும் விதமாக அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவெடுக்கக்கூடும்.
இந்த போட்டியின் முடிவு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி தனது வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் களமிறங்கும். சூப்பர்-4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மண்ணை கவ்விய வங்கதேசம் ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 39 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா 31 போட்டிகளிலும், வங்கதேசம் 7 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. 1 போட்டியில் முடிவில்லை.