முடிந்தது பங்களாதேஷின் கதை; அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!



India qualified semifinal bangladesh knocked out

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பிடித்தார். 

wc2019

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் எடுத்த போது, ரோகித் சர்மா 104 ரன்களில் அவுட்டானார். 

ராகுல் 77 ரன்கள் எடுத்த போது ரூபல் வேகத்தில் வெளியேறினார். பின் வந்த கேப்டன் கோலி (26), ஹர்திக் பாண்டியா (0) ஏமாற்றினர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார். 

wc2019

பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48 போரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

8 ஆட்டங்களில் 3 போட்டிகளில் மட்டுமே வென்று 7 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.