தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பட்டியல் இதோ! முன்னணி வீரர்களுக்கு இடமில்லை!!
வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட இருக்கின்றது.
அக்டோபர் 5-ம் தேதி நடைபெற இருக்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதி கொள்ள இருக்கின்றனர். இந்திய அணி தங்களது தொடக்க ஆட்டத்தை சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்த்து களம் காண உள்ளது.
உலகக்கோப்பைக்கு ஒருமாத காலமே இருக்கும் இந்த நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனை தொடர்ந்து, உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் முன்ணனி வீர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தவான், சஞ்சு சாம்சன் திலக் வர்மா மற்றும் சாஹல் ஆகியோருக்கு அணியில் இடம் பெறவில்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் பெயர் பட்டியல் இதோ:-
- Rohit Sharma (Captain)
- Shubman Gill
- Virat Kohli
- Shreyas Iyer
- Ishan Kishan
- KL Rahul
- Hardik Pandya (Vice-captain)
- Suryakumar Yadav
- Ravindra Jadeja
- Axar Patel
- Shardul Thakur
- Jasprit Bumrah
- Mohammed Shami
- Mohammed Siraj
- Kuldeep Yadav