மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3வது போட்டியில் 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா; கோப்பையை வெல்லுமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 , 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் டி20 போட்டிகள் சமநிலையில் முடிந்தது அதன்பிறகு தொடங்கிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது முக்கியத்துவம் பெற்றது.
அதன் பிறகு தொடங்கிய ஒருநாள் போட்டித்தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளின் படி, இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ், சிராஜுக்கு பதிலாக விஜய் சங்கர், குல்தீப் யாதவுக்கு பதிலாக யுவேந்திர சாகல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.