பாக்ஸிங் டே: பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி.!



india vs australia 3rd test melborn

டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, ஆரம்பத்திலேயே தொடக்க விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 4 டெஸ்ட்  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து 1-1 என்ற சமநிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பாக்ஸிங் டே என வருணிக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளான போட்டியில் நாணயம் சுண்டுதல் போட்டிக்கு 7 வயது சிறுவன் ஆா்சி சில்லார் பங்கு பெற்றது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.



 

மேலும் கூடுதல் சிறப்பாக இந்திய அணிக்கு அறிமுக வீரராக இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மயங்க் அகர்வாலுக்கு கேப்டன் விராட் கோலி தொப்பியை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.



 

இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க மட்டையாளராக ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய ஹனுமா விஹாரி( 8 ரன்) எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் இந்திய அணி 28 ஓவர்களில் 54/1 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.