மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணியில் அதிரடி மாற்றம்! வெளியேற்றப்பட்ட இரண்டு முக்கிய வீரர்கள்! அவர்களுக்கு பதில் யார்?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய முதல் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் தேர்வாகப்போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் போட்டியானது இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் மிகவும் கவனத்துடன் விளையாடி வருகிறது இந்திய அணி.
இன்றைய போட்டியில் கேதர் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனனர். இந்த மாற்றம் அணிக்கு வெற்றியை தேடி தருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.