அசுர வேகத்தில் தாக்கிய பந்து! நிலை குலைந்த வங்கதேச வீரர்! கோலி செய்த நெகிழ்ச்சியான காரியம்.



Indian doctor helped to Bangladesh player

இந்தியா - வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஈடன் கார்ட்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ஓட்டங்களில் அணைத்து விக்கெட்டையும் இழந்தனர்.

இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்துவருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணி வீரர் நயீம் ஹாசன் இந்திய வீரர் சமியின் பந்து வீச்சை எதிர்கொண்டபோது சமி வீசிய பந்து நயீம் ஹாசன் தலையில் பலமாக தாக்கியது. பந்து அசுர வேகத்தில் தாக்கியதை அடுத்து நயீம் ஹாசன் நிலை குலைந்துபோனார்.

virat koli

உடனே இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்திய அணியின் மருத்துவரை அழைத்து நயீம் ஹாசனை பரிசோதிக்க கூறினார். இந்திய மருத்துவர் வங்கதேச அணி வீரரை சோதித்துவிட்டு அவர் நலமுடன் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து விளையாடலாம் எனவும் கூறினார்.

தனது எதிர் அணி வீரருக்கு தன் அணியின் மருத்துவரை அழைத்து விராட்கோலி உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த காட்சியை BBCI தனது வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.