மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்.. பலம் வாய்ந்த பெங்களூருவுடன் மோதல்!
ஐபிஎல் 2020 டி20 தொடரின் ஆறாவது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது போட்டி. பஞ்சாப் அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிடஸ் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை தனது வெற்றி கணக்கை துவங்காத பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆனால் பலம் வாய்ந்த பெங்களூருவை பஞ்சாப் அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.