மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக சொதப்பிய டாப் 5 வீரர்கள் இவர்கள்தான்.. சேவாக் கூறும் அந்த 5 பேர் யார் தெரியுமா?
நடந்து முடிந்த ஐபில் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய ஐந்து வெளிநாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சேவாக்.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை அணியின் தனது மோசமான ஆட்டத்தில் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ஐபில் அணிகளில் விளையாடிய 5 மோசமான வீரர்கள் இவர்கள்தான் என 5 பேரின் பெயரை கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சேவாக்.
அந்த பட்டியலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆரோன் பிஞ்ச், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அந்த்ரே ரஸல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன், ஆர்சிபி அணியில் டேல் ஸ்டெயின் ஆகியோர்தான் அந்து ஐந்து வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார் சேவாக்...