ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெளியே துரத்தி நான்காவது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா.!



kkr-improved-fourth-palce-for-last-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் ராணா களமிறங்கினர். 

ராணா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கில் 24 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய திரிபாதி 34 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மோர்கன் அதிரடியாக ஆடி 35 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்தநிலையில் இறுதிவரை களத்தில் நின்றார்.

kkr

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் ஸ்டோக்ஸ் முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடத்தொடங்கினர். இதனையடுத்து ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி ஆடிவருகின்றனர். கொல்கத்தா அணியின் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து வந்த ராஜஸ்தான் அணி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் 35 ரன்களும், திவாட்டியா 31 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா அணியிடம் படுதோல்வியடைந்தது. கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.