பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்தவருட ஐபிஎல் சீசனில் யாரும் எட்டமுடியாத அளவிற்கு ரன்களை குவித்து முதல் இடத்தில் இருக்கும் வீரர்.!
ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 52 போட்டிகள் நடைபெற்று அணைத்து அணிகளும் 13 லீக் ஆட்டங்கள் ஆடியுள்ளனர். இன்னும் அணைத்து அணிகளுக்கும் தலா ஒரு லீக் போட்டி மட்டும் மீதி உள்ளது.
இந்தநிலையில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் விளையாடிய 13 ஆட்டங்களில் 641 ரன்கள் எடுத்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதல் இடத்தில் உள்ளார். ஒரே ஆட்டத்தில் இவரது அதிகபட்ச ரன் 132 ஆகும்.
இதனையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் விளையாடிய 13 ஆட்டங்களில் 471 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். ஒரே ஆட்டத்தில் இவரது அதிகபட்ச ரன் 106 ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் விளையாடிய 13 ஆட்டங்களில் 444 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கின்றார். ஒரே ஆட்டத்தில் இவரது அதிகபட்ச ரன் 66 ஆகும்.
இதனையடுத்து பெங்களூரு அணியின் விராட் கோலி விளையாடிய 13 ஆட்டங்களில் 431 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் இருக்கின்றார். ஒரே ஆட்டத்தில் இவரது அதிகபட்ச ரன் 90 ஆகும். இதனையடுத்து பெங்களூரு அணியின் படிக்கல் விளையாடிய 13 ஆட்டங்களில் 422 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கின்றார். ஒரே ஆட்டத்தில் இவரது அதிகபட்ச ரன் 74 ஆகும்.