மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அவருக்கு வயசாயிடுச்சு அதனால..." ரஜினியை பற்றி தல தோனி..தற்போது ட்ரெண்டிங்கில் உலவும் சூப்பர் ஸ்டார் ட்வீட்.!
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிற்கு சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டின் பல நட்சத்திர வீரர்களும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள் என்பதும் நாம் அறிந்ததே. அவர்களில் முக்கியமான ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் எம் எஸ் தோனி.
இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது. பரபரப்பான அந்தப் போட்டியின் இறுதி கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா பற்றி 2013ஆம் ஆண்டு தோனி பதிவு செய்த ட்விட் ஒன்றை தற்போது ட்ரெண்டிங்கில் கொண்டு வந்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
2013 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்திற்கு வயதாகி விட்டதால்தான் கடவுள் ரவீந்திர ஜடேஜாவை அனுப்பி இருக்கிறார் என தோனி பதிவு செய்திருந்தார். நேற்றைய ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்திற்கு பின்னர் ரசிகர்கள் தோனியின் 10 வருட பழமையான ட்விட்டை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.