ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இங்கிலாந்தின் வேகத்தில் சுருண்டு பாலே-ஆன் ஆன பாக்கிஸ்தான்.. தோல்வியை தவிர்க்குமா!
இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாக்கிஸ்தான் அணி பாலோ-ஆன் ஆகியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் க்ராலி 267, பட்லர் 152 ரன்கள் விளாசினர்.
தொடர்ந்து இரண்டாவது நாள் இறுதியில் முதல் இன்னிங்ஸை துவங்கிய பாக்கிஸ்தான் அணி முதல் 10 ஓவரிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று துவங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசாத் அலி, பவாத் ஆலம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் அசார் அலி மற்றும் ரிஸ்வான் நிதானமாக ஆடினர். 75 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த பாக்கிஸ்தான் 213 ரன்னில் 6 ஆவது விக்கெட்டை இழந்தது. ரிஸ்வான் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பாக்கிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால் சிறப்பாக ஆடிய கேப்டன் அசார் அலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் எடுத்தார். பாக்கிஸ்தான் அணி 273 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து பாலோ-ஆன் ஆன பாக்கிஸ்தான் அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆடுமாறு இங்கிலாந்து அணி கேட்டுக்கொண்டது. போதிய வெளிச்சம் இல்லாததால் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்காமலேயே மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது.