ஷிகர் தவான் நாடு திரும்ப போவதில்லை! பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு



Shikar dawan will be in England by bcci

காயம் காரணமாக 3 வாரங்கள் ஷிகர் தவான் ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நாடு திரும்பாமல் இங்கிலாந்திலே தான் இருக்கப் போகிறாராம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானின் இடது கட்டைவிரலில் அடிப்பட்டது. அன்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்ய வரவேயில்லை. காயம் குணமாக சில நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த 3 வாரங்கள் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Shikar Dhawan

இதனைத் தொடர்ந்து தவானுக்கு பதிலாக புதிதாக இந்தியாவில் இருந்து யாரை அனுப்ப போகிறார்கள் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தவான் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பிசிசிஐ மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானை இங்கிலாந்திலே தங்க வைத்து அவரது முன்னேற்றத்தை கண்காணிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது" என பதிவிட்டுள்ளது.


எனவே ஷிகர் தவான் நாடு திரும்பாததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு புதிய வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தவான் கூடிய விரைவில் குணமடைந்தால் தான் அனைவருக்கும் நிம்மதி.