மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லி அணிக்கு மரண அடி! தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி!
டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் பதினோராவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இரண்டும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஹைதராபாத் அணி வீரர்கள் பேட்டிங்கை தொடங்கி மிகவும் அபாரமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினார். தொடக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணி வீரர் ப்ரிதிவிஷா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரை அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி மிகவும் தடுமாறியது. ஒரு வழியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த ஐபிஎல் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.