மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக் கோப்பை 2023: பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா..!!
உலகக் கோப்பை 2023 தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி போட்டி ஒன்றில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்காக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளது.
பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நடைபெறும் ஒரு பயிற்சி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை விளையாடும் 11 பேர் பட்டியலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மொத்தமுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி விளையாட வைத்து பரிசோதிக்க இயலும்.
இங்கிலாந்து அணியில் அதன் முக்கிய வீரரான ஜேஸன் ராய் காயத்தால் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இடம் பிடித்துள்ள ஹாரி புருக் எப்படி செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் உற்று நோக்கும். இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம் பிடித்த அஸ்வின் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில், ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டிகளின் முடிவு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதும், வீரர்கள் தனது தனிப்பட்ட செயல்பாட்டை நிருபிக்க போராடுவார்கள் என்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.